வணக்கம் சகோ இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது யு பி ஐ பணப்பரிவர்த்தனைகளில் இப்பொழுது பணம் செலுத்தும் வரம்பானது உயர்த்தப்பட்டுள்ளது அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.
இப்பொழுது முன்னதாக நாம் ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே யு பி ஐ பணப்பரிவர்த்தனை செய்யக்கூடிய நிலையில் இப்பொழுது 5 லட்சம் ரூபாய் வரைக்கும் நாம் யு பி ஐ பயன்படுத்தி பணத்தை செலுத்த முடியும் இவை யாருக்கு பொருந்தும் என்பதை பற்றி பார்ப்போம்.
முன்பு நாம் யு பி ஐ மூலம் ஒருவருக்கு பணம் செலுத்த வேண்டும் என்றால் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலுத்த முடியும். இதனால் யு பி ஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் சில்லறை பண பரிவர்த்தனைக்கு மட்டுமே யு பி ஐ பயன்படுத்தி வந்தனர்.
அதிகபட்சம் பணம் செலுத்த வேண்டும் என்றால் நெட் பேங்கிங் வாயிலாக என் இ எஃப் டி அல்லது ஆர் டி ஜி எஸ், ஐ எம் பி எஸ் போன்ற பண பரிவர்த்தனை மூலமாகவே பணத்தை செலுத்த முடியும்.
இப்பொழுது யு பி ஐ பணப்பரிவர்த்தனை இல்லாதவர்கள் எவரும் இல்லை என்று சொல்ல முடியாது பள்ளி குழந்தைகள் முதல் அலுவலகம் செல்லும் அனைவரும் யு பி ஐ பண பரிவர்த்தனை செய்கின்றனர் சாதாரணமாக சிறிய பெட்டிக்கிடையிலிருந்து பெரிய ஷாப்பிங் மால் வரைக்கும் அனைத்து இடங்களிலும் யு பி ஐ பணப்பரிவுத்தனை செய்யப்படுகிறது.
இன்று முதல் கல்விக்கான பண பரிவர்த்தனை மற்றும் மருத்துவத்திற்கான பண பரிவர்த்தனை மேலும் வரி செலுத்தக்கூடிய பண பரிவர்த்தனை இவை அனைத்திறக்கும் ஐந்து லட்சம் ரூபாய் வரை யு பி ஐ மூலமாக பணத்தை செலுத்தலாம்.